ஒற்றை கையில் 16 பிளேட்டுகள்; டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா

0
283

சுமார் 16 தோசையுடன் இருக்கும் பிளேட்டுக்களை தன்னுடைய ஒற்றை கையில் அடுக்கி வாடிக்கையாளருக்கு கொடுத்த ஹோட்டல் ஊழியரின் திறமையை பார்த்து ஆனந்த் மஹிந்திரா வியப்படைந்துள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விடயங்கள் மற்றும் கண்களில் படும் வித்தியாசமான வீடியோக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர்களை பாராட்டி வருகிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக சுமார் 16 தோசை பிளேட்களை சாப்பிடுவதற்காகச் ஒரு கையில் கொண்டு போய் கொடுக்கிறார்.

இந்த வீடியோக்காட்சியை பார்த்த ஆனந்த் மஹிந்திரா இவரின் திறமைக்கு இவர் ஒலிம்பிக் வரை செல்லலாம். இவரின் திறமைக்கு தங்க பதக்கம் கூட கொடுக்கலாம் என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை சுமார் 14 மில்லியன் கணக்கான டுவிட்டர் பயனர்கள் பார்வையிட்டு சென்றுள்ளார்கள்.

தொடர்ந்து இதனை பார்த்த நெட்டிசன்களும் “ஊழியரின் திறமை உண்மையாகவே வியக்கத்தக்கவைகள் தான்” தங்களின் ஆதரவான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.