அரசால் நடத்தப்படுகின்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
” நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், சுதந்திர தின நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவும், சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.