ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வேலை வாய்ப்புக்கான விண்ணப்பப் படிவங்களை உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் நாளை (02-01-2023) பிற்பகல் 04.30 அல்லது அதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியான [email protected] ஊடாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ அவசர தொலைபேசி இலக்கமான 0112 789367 ஊடாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.