பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவுக்கு பிணை!

0
728

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவிற்கு மூன்று வெவ்வேறு வழக்குகளில் பிணை வழங்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகேவுக்கு எதிரான மூன்று வழக்குகள் இன்று புதன்கிழமை (1) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி வசந்த முதலிகே நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையிலும், பயங்கரவாத தடைச்சட்ட குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை (31) நீதிமன்றத்தில் கைவிடப்பட்டதன் அடிப்படையிலும், கோட்டை நீதவான் மூன்று வழக்குகளுக்கும் பிணை வழங்கியுள்ளார்.