இலங்கைக்கு வரும் அமெரிக்க துணைச் செயலாளர்!

0
357

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க கூட்டுறவின் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நேபாளத்தின் புதிய அரசாங்கத்துடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் அமெரிக்க-இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார் எனவும் கூறப்படுகின்றது.