மனைவியின் காதலனை உடலை 12 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவன்!

0
411

மனைவியின் காதலனை கொலை செய்து உடலை 12 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய கொடூரம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

காசியபாத்தை சேர்ந்த மீலால் பிரஜபத்தியின் மனைவிக்கும் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் அக்‌ஷய் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீலால் வீட்டிற்கு அக்‌ஷய் வந்த போது அவரின் மகளின் காலில் டீ கொட்டி காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த மீலால் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அக்‌ஷய்யை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். தடயங்களை மறைக்க உடலை 12 துண்டுகளாக வெட்டி குப்பை தொட்டியில் வீச்சியுள்ளார். இதையடுத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மீலாலை கைது செய்தனர்.