ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ராட்சஷ தேரையின் அளவு ஆறு மடங்கு பெரியதாக இருக்கிறது. அதேபோல் சுமார் இரண்டரை கிலோவுக்கும் அதிகமான எடையில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த தேரை இதுவரை உலகில் காணப்பட்ட தேரைகளை விட மிகவும் பெரியதாக கருதப்படுகிறது.
1935ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இந்த தேரைகள் ஆஸ்திரேலியாவிற்குள் கண்டெடுக்கப்பட்டன. ஆஸ்திரேலியா நாட்டை பொறுத்தவரை தேரைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும் உயிரினமாகவே கருதப்படுகிறது.
2.7 கிலோ எடை
தற்போது ஆஸ்திரேலிய காட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த தேரையின் எடை 2.7 கிலோவாக இருக்கிறது.
இதுகுறித்து பேசும் வனத்துறை அதிகாரி கிரே, “இந்த தேரை அதிகளவிலான பூச்சிகளையும், ஊர்வனங்களையும் மற்றும் சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகளையும் தனது உணவாக சாப்பிட்டு வந்திருக்கும்’ என்று கூறுகிறார்.
இந்த தேரை தன்னுடைய வாயில் எவ்வளவு பெரிய இரைகளை எடுத்துக்கொள்ள முடியுமோ தொடர்ந்து அவ்வளாவு பெரிய இரைகளை அது உணவாக எடுத்து வந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இன்று ஆஸ்திரேலிய காடுகளுக்குள் இயற்கையாக வேட்டையாடும் இனங்கள் என எதுவும் இல்லை.
இந்த நிலையில் இத்தகைய நச்சு இனங்கள் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கினங்களை அழித்து வருவதாக கருதப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் இந்த ராட்சத கேன் தேரை எத்தனை வயதுடையதாக இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.
15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது
பொதுவாக தேரைகள் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. எனவே இது நிச்சயம் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தேரையாகத்தான் இருக்கும் என்கிறார் கிரே.
இந்த ராட்சத தேரை தற்போது கருணைக்கொலை செய்யப்பட்டுவிட்டது. ஆஸ்திரிலேயாவின் இதுப்போன்ற உயிரினங்களுக்கு மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைப்படி இந்த தேரையின் உடல் குயின்லாந்து அருங்காட்சியத்திற்கு கொடுக்கப்பட இருக்கிறது.