இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு!

0
260

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவிற்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் இதற்கான அழைப்பினை அவர் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்துள்ள அழைப்பிதழை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.