மைத்திரிக்கு உண்டியலில் பணம் வசூலித்த நபர்!

0
407

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக திலகசிறி என்பவர் நேற்று (17) கொழும்பு – கோட்டையில் உண்டியலை குலுக்கி பணம் சேகரித்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதன்போது திரட்டப்பட்ட 1810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்துள்ளார்.

உண்டியலில் மைத்திரிக்கு பணம் சேகரித்த நபர்! | The Person Who Paid Maithiri In Bill

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா நட்டத்தை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும் அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார்.