மூன்றாம் உலக யுத்தம் ஏற்படாது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

0
331

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறை உலக நாடுகளின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்படும் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘கோல்டன் குளோப்’ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல் | President Zelenskyy Regarding The Third World War

இந்த விழாவின் போது காணொளி வாயிலாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

“முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் மூன்றாம் உலகப் போர் நடக்காது. இது மூன்று பாகங்கள் கொண்ட தொடர் கிடையாது.

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல் | President Zelenskyy Regarding The Third World War

‘கோல்டன் குளோப்’ விருதுகள் வழங்கும் விழாவானது ஒரு சிறப்பான காலகட்டத்தில் தொடங்கியது. 1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது இந்த விழா தொடங்கப்பட்டது.

அந்த சமயத்தில் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது உலகிற்கே தெரிந்த விடயமாக இருந்தது. இப்போது 2023-ம் ஆண்டு. உக்ரைனில் இன்னமும் போர் ஓயவில்லை.

ஆனால் இந்த போரின் போக்கு நாளுக்கு நாள் மாற்றம் பெற்று வருகிறது. உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறை தடுத்து நிறுத்தப்படும்.

உக்ரைன் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நடத்தும் இந்தப் போரில் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி.” இவ்வாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.