ஐயப்ப பக்தர் இலங்கை விமான நிலையத்தில் கைது!

0
350

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஐயப்பன் சுவாமியை தரிசிக்க இலங்கையில் இருந்து ஐயப்பன் பக்தர் ஒருவர் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அய்யப்ப பக்தர்களை சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் கைதான அய்யப்ப பக்தர்கள்; காரணம் குறித்து அதிர்ச்சி | Ayyappa Devotees Arrested At Airport

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் 47 வயதுடைய சந்தேகபர் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபருடன் சென்றிருந்த ஏனைய 20 அய்யப்ப பக்தர்களின் பொதிகளில் 30 கிலோ இரும்புப் பொருள்கள் இருப்பதையும் விமான நிலையப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வத்தளையில் உள்ள இரும்பு வர்த்தக நிலையத்திலிருந்து இந்த இரும்புகளைப் பெற்று இந்தியாவில் விற்பதற்கு முயற்சித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.