மஹிந்தவின் கோட்டையில் இன்று கட்டுப்பணம் செலுத்தும் மொட்டுக்கட்சி..

0
297

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன கட்சியானது மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க இன்றைய தினம் கொழும்பு, குருநாகல் மாவட்டங்களிலும் நாளைய தினம் புத்தளம் மாவட்டத்திலும் கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

அதேசமயம் புத்தளம் மாவட்டத்தில் நாளை நண்பகல் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .

ஏற்கனவே களுத்துறை மாவட்டத்தில் சில தேர்தல் தொகுதிகளில் பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குருணாகலை மாவட்டமானது மஹிந்தவின் அரசியல் கோட்டையாக பார்க்கப்படுகின்றமாய் குறிப்பிடத்தக்கது.