வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மஹிந்த பதவியேற்பு

0
346

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு | Deputy Inspector General Of Northern Province

வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மஹிந்த குணரட்ண வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு | Deputy Inspector General Of Northern Province