யாழ்.சிறுமியிடம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காணொளியை காட்டி தவறாக நடந்த பொலிஸார்!

0
399

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆபாச காணொளியை காட்டி, மிரட்டி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த 2 பொலிஸாருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று, ஆட்கள் இல்லாத வீடொன்றினுள் வைத்து இருவரும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

மேலும் அதனை காணொளியாக எடுத்து வைத்து, அதனை காட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை இரண்டு உத்தியோகத்தர்களும் மிரட்டி, தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (29-12-2022) பாதிக்கப்பட்ட சிறுமி சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் சிறுமியிடம் ஆபாச காணொளியை காட்டி தவறாக நடத்துக்கொண்ட பொலிஸார்! | Police Misbehaved Obscene Video The Girl In Jaffna

அதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது.

யாழில் சிறுமியிடம் ஆபாச காணொளியை காட்டி தவறாக நடத்துக்கொண்ட பொலிஸார்! | Police Misbehaved Obscene Video The Girl In Jaffna

இதேவேளை குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும், தம்மிடம் இருந்த காணொளியை பாடசாலை சிறுவர்கள் சிலருக்கு காண்பித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.