இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஆரம்பிக்கவுள்ள விமான சேவை!

0
441

மத்தள விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா வரையான விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி ரெட் வின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் வாரத்தில் இரண்டு தடவைகள் இவ்வாறு சேவையில் ஈடுபடும் என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மொஸ்கோவில் இருந்து ரஷ்யாவின் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இருமுறை விமானங்களை இயக்க குறித்த விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படுமாயின் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் 3 நேரடி விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.