வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு!

0
365

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாடு திரும்பவுள்ள 152 பேர்

நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றிகளையும் கூறியுள்ளார்.

கனடாவுக்கு புறப்பட்டு வியட்நாமிலுள்ள சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்! | Sri Lankans Who Left For Canada Got Stuckvietnam

யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு

அதேவேளை வியட்நாமில் மாட்டிக்கொண்டதை அடுத்து நாடுதிரும்பமாட்டம் என கூறி இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கிரிதரன் உயிரிழந்திருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.