அப்பா வந்து விட்டார், சீக்கிரம் பொய் படி என சிறுமியை அறிவுறுத்தும் வகையில் நடந்து கொண்ட நாயின் புத்திசாலித்தனம் அடங்கிய காணொளி வைரலாகி வருகிறது.
பொதுவாக, நம் வாழ்வில் மனிதனின் உற்ற தோழனாக, நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக Cஇருந்து வருகிறது. மனிதர்களுடன் நட்புடன் பழகும் குணம் கொண்டதுடன், அவர்களது செல்ல பிராணியாகவும் பலரால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டு இருந்த ஒரு சிறுமியை செல்ல பிராணியான நாய் ஒன்று, சிறுமியின் அப்பா வருகையை அறிந்து, படிக்கும்படி அறிவுறுத்திய காணொளி வைரலாகி வருகிறது.
யோக் என்ற பெயரில், பாட்னர்ஸ் இன் கிரைம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், வீடு ஒன்றில் தொலைக்காட்சி ஓடி கொண்டிருக்கிறது.

அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி காணப்படுகிறார். கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று படுத்து கிடக்கிறது.
திடீரென அது எழுந்து, வாசலை நோக்கி குரைக்கிறது. பின்னர் சிறுமி இருக்கும் பக்கம் மெல்ல திரும்பி, மேஜையின் மீது கை வைக்கிறது. படிக்க தொடங்கு என்பது போல் அறிவுறுத்துகிறது.