ரஷ்யாவுடனான சமாதான உடன்படிக்கை யதார்த்தமற்றது; ஜெலென்ஸ்கியின் ஆலோசகர்!

0
437

உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குமாறு கூட்டாளிகளை வலியுறுத்தும் அதே வேளையில் ரஷ்யாவுடனான சமாதான ஒப்பந்தம் பற்றி பேசுவது யதார்த்தமற்றது என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelensky) ஆலோசகரான மைக்கைலோ பொடோலியாக் (Mykhailo Podoliak) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யதார்த்தமற்ற திட்டங்களைப் பற்றி பேசி திசைதிருப்ப வேண்டாம், நீங்கள் RF ரஷ்ய கூட்டமைப்பு உடன் ஒரு உடன்படிக்கைக்கு வர முடியாது, என்று மைக்கைலோ பொடோலியாக் (Mykhailo Podoliak) ட்விட்டரில் கூறினார்.

போர் அதன் தோல்வியுடன் மட்டுமே முடிவுக்கு வர வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.