பெற்றோரின் கடனை அடைக்க உதவும்படி கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உதவிகோரிய இங்கிலாந்து சிறுமி!

0
473

இங்கிலாந்தில் தனது தாய், தந்தையின் கடனை அடைக்க பணம் அனுப்புமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு 8 வயது சிறுமி எம்மி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

லண்டன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் எம்மி என்ற 8 வயது சிறுமி எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதும் கடிதம் அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் தொடங்கி பலவற்றையும் கேட்பார்கள். அதில் சில தன்னலமில்லாத வகையிலும் உள்ளது.

கடனை அடைக்க கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உதவிகோரிய இங்கிலாந்து சிறுமி | Girl Asks Santa Claus For Help To Pay Off Debt

அந்த வகையில் எம்மி எழுதியுள்ள கடிதமும் இடம்பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் தனது தாய், தந்தையின் கடனை அடைக்க பணம் அனுப்புமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு 8 வயது சிறுமி எம்மி கடிதம் எழுதி உள்ளார்.

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் பொம்மைகள், இனிப்புகள் கேட்டும் சிறுவர்களிடையே எம்மி, தாய் – தந்தைக்காக பணம் கேட்டு எழுதியுள்ளமை பல்லரையும் நெகிழ வைத்துள்ளது.