பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக 40 எம்.பி.க்கள் போர்க்கொடி!

0
366

இந்திய வம்சாவளியைச் சேரந்த்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு(Rishi Sunak) எதிராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 40 எம்பிகள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்து கன்சர்வேட்டிவ் முன்னேற்றம் குழுவைச் சேர்ந்த குறித்த எம்பிகள் பிரதமருக்கு எழுதியுள்ள கடித்ததில், தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும், அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடங்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரசுப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக போர் கொடி தூக்கிய 40 எம்பிகள்! | 40 Mps Raised War Flag Prime Minister Rishi Sunaku

முன்னதாக ஆளும் கட்சிக்குள்ளேயே ரிஷி சுனக்கின்(Rishi Sunak) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய இயக்கமொன்று தொடங்கப்பட்டது.

அவரது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்பிகள் தற்போது எழுதியுள்ள கடிதம் அந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.