இலங்கையில் சிங்கள பாணியில் திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய ஜோடி!

0
486

களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் பிரித்தானிய தம்பதியினர் சிங்கள முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும் 53 வயதான நிக்கி ஜேன் என்ற தம்பதியினரே இவ்வாறு சிங்கள முறைப்படி  திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கண்டிய நடனக் கலைஞர்களுடன் கந்த விகாரையின் குமாரி ஹஸ்தியா என்ற விடுதிக்கு இத் தம்பதியினர் வருகை தந்துள்ளனர்.

சிங்கள சம்பிரதாயப்படி ஜெயமங்கலம் பாடி தெப்பச் சடங்குகளை செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.

களுத்துறை கட்டுகுருந்த கடற்கரைக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றின் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் வெளிநாட்டு திருமணம் இதுவென கூறப்படுகிறது.