திடீரென ஒன்று கூடிய முன்னாள் போராளிகள்; யாழில் சம்பவம்!

0
418

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள் வர்த்தக பிரதிநிதிகள் முன்னாள் போராளிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.