லங்கா பீரிமியர் லீக்: போட்டியில் நடந்த விபரீதம்! நான்கு பற்களை இழந்த வீரர்..

0
417

லங்கா பீரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டி Galle Gladiators அணிக்கும் Kandy Falcons அணிக்கும் இடையே இடம்பெற்றது.

இந்த போட்டி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ளது.  

இந்த போட்டியின் போது இலங்கையின் வீரர் சாமிக்க கருணாரத்ன விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

போட்டியின் போது கேட்ச் ஒன்றை பிடிக்க முயன்ற போது பந்து அவரது முகத்தில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. 

விபத்தின் பின்னர் சாமிக்க கருணாரத்ன உடனடியாக காலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவரது நான்கு பற்கள் சேதமடைந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.