4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி!

0
378

4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மொரட்டுவ லுனாவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்து நேற்று (04) இடம் பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.