கனடா விபத்தில் உயிரிழந்த யாழ்.இணுவில் குடும்பம்; புகைப்படம் வெளியானது!

0
535

கனடா – மார்க்கம் நகரில் கடந்த ஒக்டோபர் மாதம்  இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் இணுவிலை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 52 வயதான தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கனடா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். குடும்பத்தின் புகைப்படம் வெளியானது! | Canada Vehicle Accident Jaffna Family Death Photo

குறித்த விபத்து இடம்பெற்ற தினத்தன்று மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில் தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.