டிக்டாக் எடுக்க முனைந்து கடலில் வீழ்ந்த இளைஞன்; யாழில் சம்பவம்!

0
386

யாழ் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம்  இன்று மாலை (01-12-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் வீழ்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,’

யாழில் டிக்டாக் செய்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Youth Was Doing Tiktok In Jaffna Fell Into The Sea

இரண்டு நண்பர்கள் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் டிக்டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

யாழில் டிக்டாக் செய்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Youth Was Doing Tiktok In Jaffna Fell Into The Sea

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர். தெய்வாதீனமாக இரண்டு இளைஞர்களுமே உயிர் தப்பியுள்ளனர்.