இலங்கையில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த ரஷ்ய பெண்!

0
366

காலி ஹபராதுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (01-12-2022) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

நேற்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இலங்கையில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு பெண்! | Galle Train Motorcycle Crash Russian National Die

இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், ரஷ்ய பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புகையிரத கடவையில் உள்ள புகையிரத கேட் இயங்காதது குறித்து வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.