காலையில் திருமணம் மாலைக்குள் அணிக்குத் திரும்பும் மணமகன்கள்!

0
599

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் இன்று கொழும்பில் நடைபெற்ற வைபவங்களில் அசாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

கசுன் ராஜித, சரித் அசலங்கா மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று தனித்தனி இடங்களில் திருமணம் செய்து கொண்டனர்.

அந்தந்த திருமண நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டி, பல்லேகலவில் புதன்கிழமை திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக கிரிக்கெட் வீரர்கள் அணிக்கு திரும்ப உள்ளனர்.