வயலுக்கு ஆட்டுக்குட்டிகளை அனுப்ப வேண்டாம்..!மண்வெட்டியால் தாக்குதல்..

0
416

நபர் ஒருவர் இன்னொரு நபர் மீது மண்வெட்டியால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் காரணம்

அதாவது தனது வயலுக்கு ஆட்டுக்குட்டிகளை அனுப்ப வேண்டாம் என கூறிய நபர் மீது மண்வெட்டியால் தாக்குதல் மேற் கொண்டுள்ளார்.

அத் தாக்குதலில் நொச்சிக்குளம் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய வேலாயுதம் ராஜேந்திரன் என்ற நபரே இவாறு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு அந் நபர் தாக்குதலால் கை உடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அங்கு பெறப்பட்ட XRAY மூலம் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் கை உடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.