இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

0
440

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

நாட்டுக்கு வரும் அவர் இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிக்கும் அவர் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார்.

இந்திய முக்கியஸ்தர் இலங்கைக்கு விஜயம் | Ajit Doval Visited Sri Lanka

இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையிலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.