பரிகாரம் செய்வதாக கூறி பல இலட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இச் சம்பவம் அம்பாறை சியம்பலாவெவ பிரசேத்தில் இடம் பெற்றுள்ளது.
இருவர் வீட்டில் உள்ள தோஷத்தை நீக்குவதாக கூறி பரிகாரத்தின் பேரில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தோஷத்தை நிவர்த்திப்பதற்கான பரிகாரமாக தங்கத்தால் செய்யப்பட்ட பறவையின் உருவத்தை வீடொன்றில் வைத்த சந்தேகநபர்கள் 3 இலட்சம் ரூபாவை வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்றுள்ளனர்.
பரிசோதனை
சந்தேகநபர்களால் வைக்கப்பட்ட பறவையின் உருவத்தை வீட்டு உரிமையாளர் தங்க விற்பனை நிலையமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த பறவையின் உருவம் தங்கத்தினால் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரத்திற்காக 6 இலட்சம் ரூபாவை அவர்கள் வீட்டு உரிமையாளரிடம் கோரியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.