வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக நா.வேதநாயகன்…

0
437

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்று (11) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின் பதவிகள் பறிபோனநிலையில் தற்போது புதிதாக மூவர் நியமிக்கப்பட்டு அதில் ஒருவரான வேதநாயகன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னர் அரச அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் மற்றுமொரு உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.