இன்று காலை இடம்பெற்ற விபத்து! பத்துக்கும் அதிகமானவர்கள் காயம்

0
385

இன்று(10) காலை 2 பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார் பஸ் வண்டியும் இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

பத்துக்கும் அதிகமானவர்கள் காயம்

இதில் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விபத்து சம்பவம் இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் பெல்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றது.

இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியில் பயணித்தவர்களுக்கே அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.