தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இப்படத்தைத் தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிப் படங்களில் கமிட்டாகி நடித்தார்.
சிம்புவுடன் ஏற்கனவே காதல்
இவர் நடிப்பில் தற்போது 50 வது படமாக மஹா படம் வெளியாகவிருக்கிறது. சிம்புவுடன் ஏற்கனவே காதலில் இருந்து மீண்டும் மஹா படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இருவரும் மீண்டும் காதலை தொடர்வார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.
தற்போது ஹன்சிகா ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார். அவருடன் நெருக்கமாக வெளிநாட்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டார்.
ஹன்சிகாவின் தோழி
ஆனால் ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு இது இரண்டாம் திருமணமாம். அதாவது ஹன்சிகாவின் தோழியை முதலில் திருமணம் செய்திருக்கிறார் சோஹேல் கதூரியா.
அவர்களின் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு ஆட்டம் எல்லாம் போட்டிருக்கிறார். இதனையடுத்து ஹன்சிகாவின் தோழியும் சோஹேல் கதூரியாவும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதன்பின் ஹன்சிகாவுடன் நெருக்கம் காட்டி காதலித்து வந்துள்ளார். தற்போது இருவரும் விரைவில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்யவுள்ளார்கள்.
ஹன்சிகாவின் வருங்கால கணவர் மற்றும் தோழியின் திருமண புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.