உலகில் மது அருந்துபவர்களின் தரவரிசையில் 79வது இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை

0
514

உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது. மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.