கிழக்கு பல்கலை மாணவர்களின் செயல்!

0
464

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினர் இன்றையதினம் மட்டக்களப்பு களுவங்கேனி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பாடசாலை மட்ட எல்லே விளையாட்டுப்போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களை வாழ்த்தியதோடு இம் மாணவர்களிற்கு விளையாட்டு சீருடைகளை வழங்கினர்.

முன்னுதாரணமாக செயற்பட்ட கிழக்கு பல்கலை மாணவர்கள்! | Eastern University Students Who Acted

அதேவேளை குறித்த மாணவர்களின் குடும்ப சூழ்நிலையானது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதோடு இவர்களில் அதிகமான மாணவர்களின் பெற்றோர்கள் யுத்தத்தின் போது இறந்தவர்களாகவும், அவயங்களை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவ்வளவு கடின சூழ்நிலையிலும் கல்வியை மேற்கொண்டு வருவதோடு எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய மட்டத்திற்கு செல்லும் இந்த மாணவர்கள் வெற்றி வாகை சூடி வர வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினர் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

https://www.taatastransport.com/