பதற்ற சூழ்நிலையை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்!

0
377

அநுராதபுரம் ​கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளது.

பதற்றத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்! | The Police Who Fired At The Sky

அந்த இடத்தில் திரண்ட பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த குழுவைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.taatastransport.com/