உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது  ராஜபக்சக்களுக்கு வழங்க வேண்டும்! ஜே.சி.அலவத்துவல

0
542

உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது  ராஜபக்சக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

மக்களை நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்சக்களும் அவர்களது கும்பலும், அழுது அழுது சாம்பலில் இருந்து எழ முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே மீண்டும் ஒருமுறை இந்த பொய்யான தந்திரங்களுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது என ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான உறுப்பினர்களின் வீட்டில் விசேட கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ஊழல் இயக்கம் மீண்டும் எழுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜே.சி.அலவத்துவல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.taatastransport.com/