அழகு நிலையங்கள் மூலம் போதை!

0
593

பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடம் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று குளியாபிட்டியவில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர் தவறான பொருட்களை வேண்டாம் என்று கூறக்கூடிய நிலையில் பாடசாலை மாணவர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அழகுக் கலை நிலையங்கள் மூலம் அதிகரித்து வரும் போதை | Increasing Addiction Through Beauty Salons

இதேவேளை அதிகளவான பெண்களிடம் தற்போது ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த உயர்வு பதிவாகியுள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே பாதிப்பு அதிகமாகவுள்ளது.

அடிக்கடி அழகு கலை நிலையங்களுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.