பலரை வியப்பில் ஆழ்த்திய எலோன் மஸ்க்கின் செயல்!

0
553

டுவிட்டரின் தலைமையகத்திற்கு கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி ஒன்றை சுமந்து சென்று எலான் மஸ்க்(Elon Musk)ஆச்சரியப்படுத்தினார்.

டுவிட்டர் நிறுவனத்தை, 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க உள்ளார் எலான் மஸ்க்(Elon Musk). கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய எலன் மஸ்கின் செயல்! | Elon Musk S Action Surprised Many

கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார்.

பின்னர் சில வாரங்களிலேயே அம்முடிவில் இருந்து பின் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார்.

இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க்(Elon Musk) கூறுவதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.

எலன் மஸ்க்(Elon Musk) வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எலான் மஸ்க் (Elon Musk) சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இதன்மூலம், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “அதை முழுமையாக புரிந்து கொள்ளட்டும்” என்று ‘சிங்க்’ மூலம் பதிவிட்டுள்ளார். டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமைக்குள் முடித்துக்கொள்ளப் போவதாக அவர் தனது பங்குதாரர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் “தான் டுவிட்டரின் தலைமை அதிகாரி” என்று பெயரின் அருகே குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எலான் மஸ்க்(Elon Musk) டுவிட்டரின் தலைமை அதிகாரியாகிவிட்டார் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

நிதி பெற வங்கிகளுடன் இறுதிக் கடன் ஒப்பந்த பணியில் எலான் மஸ்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன. மேலும் விரைவில் இதுகுறித்த முழுவிவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.