தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நடத்தவுள்ள 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு உயர்தர தவணைப் பரீட்சை குறித்த நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பரீட்சை அட்டவணை
2023ஆம் ஆண்டு பிரிவுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24ஆம் திகதி வியாழக்கிழமை வரையும் 2022ஆம் ஆண்டுக்குரிய பிரிவுக்கான இறுதித் தவணைப் பரீட்சை நவம்பர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கான நேர அட்டவணை உரிய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.