முதியவருக்கு உதவ சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

0
395

அயல் வீட்டிலிருந்த முதியவருக்கு உதவி செய்ய சென்றிருந்த நபர் மீது மதில் இடிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் கொழும்பு – கிராண்ட்பாஸ் பகதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவம தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தனது வீட்டின் அயல் வீட்டில் உள்ள முதியவருக்கு உதவி செய்யும் நோக்கில் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு குறித்த முதியவரை வீட்டின் பின்புறத்தில் உள்ள மலசல கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்த மதில் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபரை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 55 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.