இலங்கை ஆசிரியையின் செயல்; நெகிழ்ச்சி சம்பவம்

0
497

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் மாணவர்கள் காலை நேர உணவு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான காரணங்களினால் மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

அது குறித்து இலங்கை கல்வியமைச்சு கரிசனை கொண்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளில் உணவு பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களை அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் செயற்பாடு ஒட்டு மொத்த மக்களின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.

செயல்

ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிலுள்ள ஸ்ரீ ராகுல மகா வித்தியாலத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு ஊட்டி விடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆசிரியைக்கு அப்பால் தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி விடுகிறார்.

அனைவரையும் நெகிழ வைத்த ஆசிரியையின் செயல் | The Teachers Action Made Everyone Resilient

குறித்த ஆசிரியை செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு அவ் ஆசிரியைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.