ரணகளமாகும் பிக்பாஸ் வீடு; செருப்பை கையிலெடுத்த ஆயிஷா!

0
605

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் ராங்கிங் பிரகாரம் நிற்குமாறு பிக்பாஸ் கூறுகின்றார். அதில் அசீம் கருத்துக் கூறுகின்றார்.

அதாவது தகுதி இல்லாத பல பேர் நிற்பதாகவும், அதில் 9 ஆம் இலக்கத்தில் நின்ற ஆயிஷாவை பார்த்து “சுத்தமாகவே தகுதி இல்லாத ஆளு” என்றும் அசீம் கூற, கடுப்பான ஆயிஷா நான் எந்த விதத்தில் தகுதி இல்லாத ஆளு எனக் கேட்டு சண்டையை ஆரம்பிக்கின்றார்.

அதற்கு உடனே அசீம் “நீ தூக்கத்தை தவிர வேற என்ன தான் பண்ணி இருக்காய்” எனக் கேட்கின்றார். உடனே ஆயிஷா “நீங்க மட்டும் தூங்கலயா” எனப் பதிலுக்கு கேட்கின்றார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் வாய்சணடை பெரிதாக ஆரம்பிக்க அசீம் ஆயிஷாவை வாடி போடி என்ற வார்த்தைகளால் திட்டுகின்றார்.

இதனால் சிமன் கொண்ட ஆயிஷா அவரது செருப்பை கையில் எடுத்து எறித்த ப்ரமோ  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.