காலநிலை மாற்றம் காரணமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பறவைகள்!

0
597

காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் பெரியநீலாவணை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றன.

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு பறவைகள்! | Foreign Birds Visiting Sri Lanka

3 ஆயிரம் மைல் தூரம் பறந்து வரும் பறவைகள்

இம் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகள் இங்கு வந்து தங்கியுள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் கூடு கட்டத் தொடங்கும். 3 ஆயிரம் மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து இந்த பறவைகள் இலங்கைக்கு வருகின்றன.

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு பறவைகள்! | Foreign Birds Visiting Sri Lanka

இந்தப் பறவைகள் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்துப் பின்னர் தம் குச்சுகளுடன் மீண்டும் பறந்து செல்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கண்டவிட்டு கண்டம் வரும் பறவைகளில் நாரை, அன்னம் உள்ளிட்ட வலசைப் பறவை இனங்கள் அதிகம் காணப்படுகின்றது.

மேலும் இந்தப் பறவைகளை இரசிப்பதற்காகப் பலரும் குறித்த இடங்களுக்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.