பிக் பாஸ் சீசன் 6யில் இன்றைய தினம் இடம்பெற்ற சோக கதையை டாஸ்க்கும், நடன போட்டி டாஸ்க்கும் விருப்பாக இடம்பெற்றன.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 யில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள இலங்கை பெண்ணான ஜனனி சோக கதை டாஸ்கில் என்னை பார்க்குற எல்லோரும் எனக்கு எந்தவொரும் கஷ்டமும் இல்லை என நினைப்பார்கள்.

ஆனால், நான் கஷ்டப்பட்டு படிச்சி வளர்ந்தேன் என பழைய கதையை பேசத் தொடங்கியதும் விக்ரமன் முதல் ஆளாக எழுந்து வந்து ரெட் லைட்டை அமுக்க கிளம்பியதும் நிவாஷினி மற்றும் தனலட்சுமி ஓடி வந்து ரெட் லைட் அடித்தனர்.
இது தொடர்பில் சமூக வலைதள ஊடகம் ஒன்று இயக்குநரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்த கருத்து வைரலாக பேசப்பட்டு வருகின்றனர்.

அவர் தெரிவித்த கருத்து,
பொதுவாக இலங்கை தமிழர்கள், அவர்களுடைய கதை, அங்கு பல வரலாறு, பெரும்பாலும் கண்ணீர்களுடன் இருக்க கூடிய கதை.
சோக கதை டாஸ்கில் ஜனனியின் கதை நிராகரிக்கப்பட்டு சிக்கிரமாக முடிந்ததற்கான ஒரு காரணம் நாமினேஷனில் மக்களை சந்தித்துவிட்டு வரவேண்டும் Free Zone போய்விட கூடாது என ஒரே எண்ணமே தவிர அவருடைய கதையை அசிங்கப்படுத்த வேண்டும், கலங்கப்படுத்த வேண்டும் அல்லது அந்த உணர்வை தட்டிக்கழித்த மாதிரி யாரும் செய்த மாதிரி தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனனியால் மக்களை சந்தித்து வரமுடியும் அதற்கான வழி அவருக்கு இருக்கும், இவர் Free Zone போவதைவிட மக்களை சந்திப்பது சரியாக இருக்கும் என சக போட்டியாளர்கள் கலந்து அலோசனை செய்து அந்த ரெட் லைட்டை அழுத்தியுள்ளதாக அவர் கருந்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனனியிடம் நெருக்கி பழகும் ரச்சிதா Buzzer அழுதவேண்டிய நோக்கம் என்னவாக இருக்கு முடியும் அது துரோகமாக இருப்பதற்கான ஒரு நோக்க தெரியல, தன்னுடைய கண்ணீர் சிந்த கூடிய ஒரு கதையை தான் தப்பித்துக்கொள்ள கூடிய இரு வாய்ப்பாக இருந்துவிட கூடாது, மக்களை சந்தித்து வெற்றி பெரும் திறன் ஜனனிக்கு இருக்கும் என ரச்சிதா அல்லது சக போட்டியாளர்கள் வலுவாக நம்பி இருக்க வேண்டும் அதனால் தான் ரெட் லைட்டை அழுத்தி இருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.