தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இலங்கை மக்கள்!

0
568

தீபாவளியை முன்னிட்டு மலையக பகுதிகளில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் எதிர்வரும் தீபாவளியை கடந்த காலங்களை போல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக சகல பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது அரசாங்கத்தின் வரி விதிப்பால் மேலும் விலை உயர்ந்த வண்ணம் உள்ளன என்று கூறப்படுகின்றது.

தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இந்துக்கள் | Hindus Are Unable To Celebrate Diwali

காரணம்

15000/=முன்பணம் பெற்றாலும் புத்தாடை உடுத்த முடியாது. ஆடைகளின் விலையும் உயர்ந்துள்ளது. அரசாங்கம் கோதுமை மா 290/= ரூபாய் வீதம் விற்பனை செய்ய வேண்டும் என கூறிய போதும் நகரில் 450/= ரூபாய் வீதம் விற்பனை செய்வதை காண கூடியதாக உள்ளது. அதே போல் ஏனைய பொருட்கள் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இம் முறை மத்திய மலைநாட்டில் உள்ள இந்துக்கள் தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். மத்திய மலை நாடு மட்டும் இன்றி சகல சைவ மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.