10 நாட்களாக காணாமல் போயிருந்த மாணவன் நாடு திரும்பி உள்ளார்

0
464

10 நாட்களாக காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் மாணவர் புதன்கிழமை (12) கலந்துகொண்டதாக பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி முதல் தனது விடுதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கடிதம் ஒன்றை வைத்துவிட்டு அந்த இளைஞர் தனது விடுதியை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

கடவத்தை, கணேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதான இவர் கடந்த சில நாட்களாக பதுளையில் தங்கியிருந்ததாகவும், அதன் போது தனது தாயாருக்கு தனது சுகத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.