23 வயது இளம் யுவதி கடத்தல்; இருவர் கைது

0
382
A terrified young woman held captive by a man with his hand over her mouth

அலுத்கம- மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தோல்வி

காதல் தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக நேற்றிரவு (12) கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட யுவதி தன்னஹேன யக்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட யுவதி சினவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைதான சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இளம் யுவதி கடத்தல்; இருவரை மடக்கிய பொலிஸார்! | Kidnapping Of Young Women