இலங்கை மத்திய வங்கியில் தௌலகலக்கு பதவி உயர்வு!

0
422

இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.ஏ.என்.தௌலகல பதவி உயர்வு பெற்றுள்ளார் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கே.எம்.ஏ.என்.தௌலகல கடமையாற்றியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் தௌலகலக்கு பதவி உயர்வு! | Daulagala Deputy Governor Central Bank Sri Lanka

வங்கியின் அறிவிப்புக்கு அமைய நிதி அமைச்சரின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இம் மாதம் (அக்டோபர்) 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.